கோவை பேருந்தில் பயணி மறந்துவிட்ட ரூ.20,000-ஐ திருப்பி அளித்த ஓட்டுநர், நடத்துனர்

கோவையில் சோமனூர்-காந்திபுரம் வழித்தடப் பேருந்தில் பயணி மறந்துவிட்ட ரூ.20,000-ஐ உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுநர் K.விஜயகுமார், நடத்துனர் V.A.முருகன் ஆகியோரை மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ் பாராட்டினார்.


கோவை: கோவையில் அரசு பேருந்தில் பயணி மறந்துவிட்ட ரூ.20,000 பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை, கோவையில் TN 38 N 3524 எண் கொண்ட 20A வழித்தட பேருந்தில் சோமனூர் முதல் காந்திபுரம் வரை ஓட்டுநர் K.விஜயகுமார் மற்றும் நடத்துனர் V.A.முருகன் ஆகியோர் பணியாற்றினர். இந்த பேருந்தில் பயணித்த ஒரு பெண் பயணி தனது உடைமைகளை மறந்துவிட்டு சென்றுள்ளார்.

இதனை கவனித்த ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் சேர்ந்து, அந்த பெண் பயணியை கண்டுபிடித்து, அவரது உடைமைகளை திருப்பி ஒப்படைத்துள்ளனர். அதில் ரூ.20,000 பணமும், பயணி வைத்திருந்த அனைத்து பொருட்களும் இருந்தன. இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த பெண் பயணி, ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் நேர்மைக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த சம்பவம் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கோவை அரசு போக்குவரத்துக் கழகத்திற்கும், அதன் ஊழியர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளது. இந்நிலையில், இன்று (ஜூலை 23) கோவை அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஜோசப் டயஸ், நேர்மையாக நடந்துகொண்ட ஓட்டுநர் K.விஜயகுமார் மற்றும் நடத்துனர் V.A.முருகன் ஆகியோரை அழைத்து பாராட்டினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...