பொள்ளாச்சியில் கொலை வழக்கு குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

பொள்ளாச்சி நெகமம் பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைதான திருப்பூர் நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கோவை மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின் பேரில் கலெக்டர் உத்தரவிட்டார்.


Coimbatore: பொள்ளாச்சி நெகமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

பொள்ளாச்சி நெகமம் காவல் நிலைய பகுதியில் சுந்தராபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திருப்பூரைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற மணி என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், குற்றவாளி மணி மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடிக்கு பரிந்துரை செய்தார். இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அளித்த உத்தரவின் பேரில் ஜூலை 23 ஆம் தேதி மணி குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...