கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து; ரூ.1 கோடி நன்கொடை

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இளைஞர் நலனுக்காக ரூ.1 கோடி நன்கொடை வழங்கினார்.


கோவை: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்ல பழனிசாமி அவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இளைஞர் நலனுக்காகவும் விளையாட்டு மேம்பாட்டுக்காகவும் பலவிதமான திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் செயல்பாடுகளை டாக்டர் நல்ல பழனிசாமி பாராட்டினார். இளைஞர்களின் திறனை தூண்டும் பலவிதத் திட்டங்களுக்காக KMCH சார்பிலும், Dr NGP Institute சார்பிலும், ரூ. 1 கோடி நன்கொடையாக அளித்தார்.

இந்த சந்திப்பின் போது, கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு கோவை மக்கள் சார்பில் டாக்டர் நல்ல பழனிசாமி தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்த சந்திப்பின்போது கேஎம்சிஹெச் மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி எஸ். கார்த்திகேயன் உடனிருந்தார்.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இளைஞர்களின் உடல் ஆரோக்கியத்தை முன்னிட்டும், புற்றுநோய் முதலான நோய்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் கேஎம்சிஹெச் மருத்துவமனை வருடங்களுக்கு மேலாக மாரத்தான் ஓட்டப்பந்தய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...