கோவை-திருச்சி சாலையில் குடிநீர் மற்றும் சாக்கடை திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை-திருச்சி சாலை சிங்காநல்லூர் பகுதியில் குடிநீர், சாக்கடை மற்றும் IOCL பணிகளுக்கான குழாய் பதிப்பு முடிந்த பின் சாலை சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் மாநகராட்சி ஆணையர் மா.சிவகுருபிரபாகரன் ஆய்வு செய்தனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் மா.சிவகுருபிரபாகரன் ஆகியோர் இன்று இரவு (23.07.2024) கோயம்புத்தூர்-திருச்சி சாலை சிங்காநல்லூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்தனர்.

இப்பகுதியில் 24*7 குடிநீர் திட்டப் பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் இந்தியன் ஆயில் கார்பரேசன் (IOCL) ஆகிய பணிகளுக்காக குழாய்கள் பதிக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில், சாலை சீரமைக்கும் பணியினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர், சாலை சீரமைக்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.



இந்த ஆய்வின் போது மாநகர தலைமை பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையர் முத்துச்சாமி, செயற்பொறியாளர் கருப்புசாமி, நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் முரளிக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

சாலை சீரமைப்பு பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் போக்குவரத்து வசதி மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டப் பணிகள் முடிவடைந்ததும், சிங்காநல்லூர் பகுதி மக்களுக்கு மேம்பட்ட குடிநீர் விநியோகம் மற்றும் சாக்கடை வசதிகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...