கோவை - லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும்

கோவையில் இருந்து புறப்படும் லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் பொறியியல் பணிகள் காரணமாக இன்று 2 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இரயில் காலை 11 மணிக்கு புறப்படும்.


Coimbatore: கோவையில் இருந்து புறப்படும் லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் இரயில் இன்று 2 மணி நேரம் தாமதமாக புறப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

தென்னக ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வண்டி எண் 11014, கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி வழியாகச் செல்லும் லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் இன்று ஜூலை 24 காலை 8.50 மணிக்கு கோவை ஜங்சனில் இருந்து புறப்படுவதாக இருந்தது.

ஆனால், பொறியியல் பணிகள் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் 2 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக காலை 11 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாமதம் இன்று ஒரு நாள் மட்டுமே என்றும், வழக்கமான அட்டவணைப்படி நாளை முதல் இரயில் இயக்கப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள் இந்த மாற்றத்தை கவனத்தில் கொண்டு தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...