ஆனைகட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிப்பு

கோவை மாவட்டம் ஆனைகட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கான இந்த நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் சேர்க்கை நடைபெறுகிறது.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாவட்டம் ஆனைகட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இந்த பழங்குடியினருக்கான தொழிற்பயிற்சி நிலையத்தில் எலெக்ட்ரீசியன், ஃபிட்டர், ஒயர்மேன், வெல்டர் ஆகிய பிரிவுகளில் இருபாலருக்கும் நேரடிச் சேர்க்கை நடைபெற்று வருகிறது. சேர விரும்பும் மாணவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் ஆனைகட்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்துக்கு நேரில் சென்று சேர்க்கை பெறலாம்.


சேரும் மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். அவற்றில் இலவச பேருந்து அட்டை, வருகையின் அடிப்படையில் மாதம் ரூ.750 கல்வி உதவித்தொகை, இலவச பாடப் புத்தகங்கள், சீருடைகள், காலணிகள், வரைபடக் கருவிகள், மிதிவண்டி ஆகியவை அடங்கும்.


மேலும், பயிற்சி முடித்த அனைவருக்கும் வளாக நேர்காணல் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும் என்றும் ஆட்சியர் உறுதியளித்துள்ளார். விடுதியின் காலியிடங்களைப் பொறுத்து உணவு மற்றும் தங்கும் வசதி இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 94990-55694, 99945-55884, 94430-15904, 99421-28234, 95002-49705, 98657-96373 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம் என்று ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...