கோவை மாநகராட்சி 23வது வார்டில் புதிய பூங்கா திறப்பு: ஆணையாளர் திறந்து வைத்தார்

கோவை மாநகராட்சி 23வது வார்டில் ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா மற்றும் பல்லுயிர் பூங்காவை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் திறந்து வைத்தார். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இப்பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில் உள்ள 23வது வார்டு பி.எம்.ஆர். லே-அவுட் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா மற்றும் பல்லுயிர் பூங்காவை மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் இன்று (24.07.2024) திறந்து வைத்தார்.

விஜயலட்சுமி, ராமகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் முழு பங்களிப்புடன் ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இப்பூங்காவில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.



இப்பூங்காவில் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், சோலார் மின்விளக்குகள், குடிநீர் வசதி, ஓய்வு அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சொட்டுநீர் பாசன வசதி மற்றும் நடைபாதை உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இப்பூங்காவில் இடம்பெற்றுள்ளன.



பூங்காவை திறந்து வைத்து பேசிய மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன், "இப்பூங்காவினை சிறந்த முறையில் அமைத்துத் தந்த தன்னார்வலருக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்பகுதி பொதுமக்கள் இப்பூங்காவினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு பயனடைய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.



இந்நிகழ்வில் கிழக்கு மண்டல குழுத்தலைவர் திருமதி இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாமன்ற உறுப்பினர் திருசித்ரா மணியன், உதவி ஆணையர் திரு முத்துச்சாமி, விஜயலட்சுமி-ராமகிருஷ்ணன் டிரஸ்ட் நிறுவனர் திரு ராமகிருஷ்ணன், நிர்வாக இயக்குனர் திருமதி உஷா ராணி, ஒருங்கிணைப்பாளர் திரு பாலகிருஷ்ணன், செயற்பொறியாளர் திரு கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் திரு ராஜேஷ், உதவி பொறியாளர் திரு குமார், அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...