பொள்ளாச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் பெண் தர்ணா

பொள்ளாச்சியில், மனைவியின் அனுமதியின்றி சொத்து விற்கப்பட்டதாகக் கூறி, சார்பதிவாளர் அலுவலகத்தில் இரு குழந்தைகளுடன் பெண் தர்ணா போராட்டம் நடத்தினார். சொத்து விற்பனையை ரத்து செய்யக் கோரி இந்த போராட்டம் நடைபெற்றது.


Coimbatore: பொள்ளாச்சி ஆர் பொன்னாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சத்யவாணி - சுரேஷ் தம்பதியினருக்கு இடையே சொத்து விவகாரத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சமீப காலமாக கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.

இந்நிலையில், தாம் வசிக்கும் வீட்டை விற்க கணவர் சுரேஷ் முயற்சி செய்து வந்ததை அறிந்த மனைவி சத்யவாணி, கடந்த ஒன்பதாம் தேதி சார்பதிவாளர் அலுவலகத்தில் சொத்தை விற்க தடங்கல் மனு அளித்திருந்தார். ஆனால், சார்பதிவாளர் அந்த மனுவை விசாரிக்காமல், கடந்த 12ஆம் தேதி வேறொரு நபருக்கு சொத்தை கிரயம் செய்து கொடுத்துள்ளார்.



இதனை அறிந்த சத்யவாணி, தனது இரு குழந்தைகளுடன் சார்பதிவாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். சொத்து கிரயம் செய்ததை ரத்து செய்யக் கோரி கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, கணவர் சுரேஷிடம் அசல் பத்திரத்தை கொண்டு வரச் சொல்லி சார்பதிவாளர் உத்தரவிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உரிய தீர்வு காணப்படும் என்று சார்பதிவாளர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, தர்ணாவில் ஈடுபட்ட சத்யவாணி அங்கிருந்து கலைந்து சென்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...