உச்ச நீதிமன்றத்தின் வேலை நேரம் மாற்றம்: ஆகஸ்ட் 1 முதல் அமல்

உச்ச நீதிமன்றத்தின் வேலை நேரம் ஆகஸ்ட் 1, 2024 முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாற்றப்படுகிறது. இந்த மாற்றம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் உத்தரவின் பேரில் செய்யப்பட்டுள்ளது.


உச்ச நீதிமன்றத்தின் வேலை நேரத்தில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வருகின்ற ஆகஸ்ட் 1, 2024 முதல் நீதிமன்றத்தின் வேலை நேரம் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் உச்ச நீதிமன்ற விதிகள், 2013-ன் Order II-ன் Rule 4-ன் துணை விதி (3)-ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களின் அடிப்படையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியால் செய்யப்பட்டுள்ளது.

இந்த திருத்தத்தின்படி, Order II-ன் Rule 1, 2 மற்றும் 3 ஆகியவை பின்வருமாறு மாற்றப்பட்டுள்ளன:

Rule 1: தலைமை நீதிபதியின் எந்தவொரு உத்தரவுக்கும் உட்பட்டு, நீதிமன்ற அலுவலகங்களின் வேலை நேரம் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இருக்கும்.

Rule 2: நீதிமன்ற அலுவலகங்கள் விடுமுறை நாட்களிலும், ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளிலும் மூடப்பட்டிருக்கும்.

Rule 3: நீதிமன்ற விடுமுறைகள் மற்றும் பொது விடுமுறைகளின் போது, தலைமை நீதிபதி உத்தரவிடும் நேரங்களில் நீதிமன்ற அலுவலகங்கள் திறந்திருக்கும்.

இந்த புதிய மாற்றங்கள் ஆகஸ்ட் 1, 2024 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...