செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது. கடந்த வாரம் அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.


Coimbatore: செந்தில் பாலாஜி தொடர்ந்த ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின் போது, வழக்கிலிருந்து உடனடியாக விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் வாதிடப்பட்டது.


உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜி தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை எப்போது விசாரணையை முடித்து முடிவெடுப்பார்கள் என்பது தெளிவில்லாத நிலையில், செந்தில் பாலாஜியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்ற வாதம் அவரது தரப்பில் முன்வைக்கப்பட்டது.


முந்தைய விசாரணையின் போது, அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் இல்லாததால் வழக்கை வேறொரு நாளுக்கு மாற்றி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை இன்றைய தினம் (24-07-2024) ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நடைபெறவுள்ளது. இந்த விசாரணையில் என்ன முடிவு எடுக்கப்படும் என்பதை எதிர்நோக்கி அனைவரும் காத்திருக்கின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...