கோவை மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம்: முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

கோவை மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 24 அன்று நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் தலைமையை பாராட்டியும், மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Coimbatore: கோவை வடகோவை கிராஸ்கட் சாலையில் உள்ள கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில், கோவை மாநகராட்சி திமுக மாமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 24 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் ex.எம்எல்ஏ., கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.அ.ரவி, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநகராட்சி திமுக குழுத் தலைவர் இரா.கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாநகராட்சி துணை மேயர் இரா.வெற்றிச் செல்வன், கொறடா ஆர்.பத்மாவதி, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள், நிலைக்குழுத் தலைவர்கள் மற்றும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. முதல் தீர்மானத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினின் தலைமையின் கீழ் கட்சி பெற்ற வெற்றிகளை பாராட்டி நன்றி தெரிவிக்கப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40-40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.

இரண்டாவது தீர்மானத்தில், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை வன்மையாக கண்டித்தனர். பேரிடர் நிவாரண நிதி, மெட்ரோ இரயில் திட்டம் போன்றவற்றிற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினர்.



"தமிழ்நாட்டின் நலன் முழுமையாக வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது இந்திய நாட்டின் கூட்டாண்மைத் தத்துவத்திற்கு எதிரானது," என்று தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதியில், மாநகராட்சி துணை மேயர் இரா.வெற்றிச்செல்வன் நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...