பொள்ளாச்சியில் பிரதான குழாய் உடைப்பு: பல்வேறு பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிப்பு

பொள்ளாச்சியில் விஜயபுரம் அருகே பிரதான குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் விஜயபுரம், ரத்தினசபாபதிபுரம், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி நகரத்தில் பிரதான குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பல்வேறு பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி நகரத்திற்குட்பட்ட மகாலிங்கபுரம் மற்றும் அண்ணா நகர் பகுதிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைந்துள்ளன. அம்பராம்பாளையம் ஆற்றிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, பெரிய குழாய்கள் மூலம் இந்த தொட்டிகளுக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்நிலையில், பொள்ளாச்சியிலிருந்து பல்லடம் செல்லும் சாலையில் உள்ள விஜயபுரம், ரத்தினசபாபதிபுரம், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அப்போது, விஜயபுரம் அருகே செல்லும் பிரதான குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.



இந்த உடைப்பின் காரணமாக சுமார் 15 அடி உயரத்திற்கு தண்ணீர் பீறிட்டு கிளம்பியது. இதனால் சாலையில் தண்ணீர் ஆறு போல ஓடியது.



அருகில் இருந்த பொதுமக்கள் நகராட்சி குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். ஆனால், நீண்ட நேரம் கழித்தே அதிகாரிகள் வந்ததால், பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகியது.

இந்த உடைப்பின் காரணமாக விஜயபுரம், ரத்தினசபாபதிபுரம், மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குடிநீர் வினியோகத்தை விரைவில் சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...