கோவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்: 63 மனுக்களுக்கு தீர்வு

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் 82 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, 63 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. நான்கு மனுக்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் இன்று (ஜூலை 24) நடைபெற்றது. இந்த முகாம் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் நடத்தப்பட்டது.



இந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில் குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை தொடர்பான 82 மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது. இதில் 63 மனுக்களுக்கு சுமூக தீர்வு காணப்பட்டது. நான்கு மனுக்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.



மேலும், 15 மனுக்கள் மீது மேல்விசாரணை நடத்த பரிந்துரை செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

இந்த முகாமில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பொதுமக்களின் புகார் மனுக்கள் மீது தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...