இடையர்பாளையம் லக்ஷ்மி விநாயகர் ஆலயத்தில் ஆடிதிருக்கல்யாணத்தை முன்னிட்டு முளைப்பாரி விழா

கோவை இடையர்பாளையம் லக்ஷ்மி விநாயகர் ஆலயத்தில் ஆடிதிருக்கல்யாணத்தை முன்னிட்டு முளைப்பாரி போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் அம்மன் சன்னதியில் கும்மியடித்து பக்தி பாடல்களை பாடினர்.


Coimbatore: கோவை இடையர்பாளையம் அடுத்த லட்சுமி நகர் பகுதியில் அமைந்துள்ள லக்ஷ்மி விநாயகர் ஆலயத்தில் ஆடிதிருக்கல்யாணத்தை முன்னிட்டு முளைப்பாரி போடுதல் நிகழ்ச்சி இன்று (ஜூலை 24) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், முளைப்பாரி போடுவதற்கு தேவையான மூன்று வகையான தானிய வகைகளை பக்தர்கள் வாங்கி தானமாக கோவிலுக்கு வழங்கினர்.



பின்னர், பக்தர்கள் அனைவரும் அம்மன் சன்னதியில் ஒன்று கூடி கும்மியடித்து பக்தி பாடல்களை பாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...