இளைஞர்கள் போதைக்கு அடிமையாவது வேதனை அளிக்கிறது - குரு வணக்க நாள் விழாவில் குமரகுருபர சுவாமிகள்

கோவை சின்னவேடம்பட்டி கெளமார மடாலயத்தில் குரு வணக்க நாள் விழா நடைபெற்றது. குமரகுருபர சுவாமிகள் இளைஞர்களின் போதை பழக்கம் குறித்து கவலை தெரிவித்தார். அடுத்த ஆண்டு கொங்கு நாட்டின் அனைத்து மடாதிபதிகளையும் ஒருங்கிணைத்து விழா கொண்டாட வேண்டும் என்றார்.


Coimbatore: கோவை சின்னவேடம்பட்டி கெளமார மடாலயத்தில் குரு வணக்க நாள் விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு கலைவாணி கல்வி நிறுவனங்களின் இணை தாளாளரும், முன்னாள் கல்லூரி கல்வி இயக்குநருமான டாக்டர் குமாரசாமி தலைமை வகித்தார். பேரூர் ஆதீனம் தவத்திரு. மருதாசல அடிகளார், செஞ்சேரி மலை நந்தவன திருமடம் முத்து சிவராமசாமி அடிகளார், நிலக்கிழார் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வணிக வரித்துறை முன்னாள் முதன்மை ஆணையர் ராமலிங்கம் கலந்து கொண்டார்.

விழாவில் குமரகுருபர சுவாமிகள் அருளாசி வழங்கி சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில், கெளமார மடாலயத்தின் வரலாற்றை விளக்கினார். 1890-ம் ஆண்டு சின்னவேடம்பட்டியில் ராமானந்த சுவாமிகளால் இம்மடாலயம் தோற்றுவிக்கப்பட்டதாகவும், அவரது முக்கிய கொள்கைகளாக கொல்லாமையும், புலால் உணவு மறுத்தலும் இருந்ததாகவும் கூறினார்.

குமரகுருபர சுவாமிகள் தொடர்ந்து பேசுகையில், "தற்போது நமது சமயத்திற்கு பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டு வருவதை நமது கண்முன் பார்த்து வருகிறோம். நமது இளைய சமுதாயம் எங்கே சென்று கொண்டு இருக்கிறது என்பதை அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும். நமது மொழியையும் இழந்து வருகிறோம். இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருவதை பார்த்து வருகிறோம். இது வேதனை அளிக்கிறது," என்று கவலை தெரிவித்தார்.

மேலும், "குரு என்பவர் மடாதிபதிகள் மட்டுமல்ல ஆசிரியரும் குருதான். அடுத்த ஆண்டு கொங்கு நாட்டில் உள்ள அனைத்து மடாதிபதிகளையும் ஒருங்கிணைத்து குரு வணக்க நாளை கொண்டாட வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...