கோவை பறவைகள் மறுவாழ்வு மையத்தில் நவீன எக்ஸ்ரே இயந்திரம் திறப்பு

கோவை வனக் கல்லூரி வளாகத்தில் உள்ள பறவைகள் மறுவாழ்வு மையத்தில் ரூ.9 லட்சம் மதிப்பிலான நவீன எக்ஸ்ரே இயந்திரம் திறக்கப்பட்டது. இது பறவைகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க உதவும்.


Coimbatore: கோவை வனக் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் பறவைகள் மறுவாழ்வு மையத்தில் ரூ.9 லட்சம் மதிப்பிலான நவீன எக்ஸ்ரே இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாட்டை கோவை மண்டல வனப் பாதுகாவலர் எஸ்.ராமசுப்பிரமணியம் ஜூலை 24 அன்று தொடங்கி வைத்தார்.

பறவைகள் மறுவாழ்வு மைய பொறுப்பாளர்கள் வின்னி மற்றும் ஜோசப் கூறுகையில், இந்த அமைப்பு மூலம் இதுவரை சுமார் 110 வகையான 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். விபத்தில் காயமடையும் பறவைகள், நோய்வாய்ப்பட்ட பறவைகள், கூட்டிலிருந்து தவறி விழும் குஞ்சுகள் ஆகியவற்றை மீட்டு சிகிச்சையளித்து மீண்டும் விடுவிக்கப்படுவதாக அவர்கள் கூறினர்.

தற்போது இம்மையத்தில் மயில், கழுகு, கிளி, குயில், காகம், ஆந்தை, கொக்கு, புல்புல் உள்ளிட்ட பறவைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புதிதாக அமைக்கப்பட்டுள்ள எக்ஸ்ரே இயந்திரம் மூலம் காயமடைந்த பறவைகளுக்கு எக்ஸ்ரே செய்து தேவையான சிகிச்சை அளிக்க முடியும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இம்மையத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கோவை வனக் கல்லூரி வளாகத்திற்குள் உள்ள இம்மையம் காலை 9 முதல் மாலை 6 மணி வரை இயங்குகிறது. காயமடைந்த மற்றும் மறுவாழ்வு தேவைப்படும் பறவைகள் குறித்த விவரங்களை மாவட்ட வனத் துறையினருக்கு 1800 425 45456 என்ற உதவி எண்ணிலும், பறவைகள் மறுவாழ்வு மையத்தை 96260 11011 என்ற எண்ணிலும் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள எக்ஸ்ரே இயந்திரத்தில் காயமடைந்த ஆண் மயிலுக்கு புதன்கிழமை எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கத் தலைவர் குமார்பால் தாகா, உதவி ஆளுநர் பிரேம்குமார், வனக் கல்லூரி ஆராய்ச்சியாளர் நாகராஜன், வனக் கால்நடை மருத்துவர் ஏ.சுகுமார், ஏஆர்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.வருண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...