கோவை மாநகராட்சி அலுவலர்களுக்கான குழு விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்தில் மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் அலுவலர்களுக்கான குழு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். இப்போட்டிகள் ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, பல்வேறு விளையாட்டுகளில் நடைபெறுகிறது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி, மேற்கு மண்டலம், ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்தில், மாநகராட்சி அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கான குழு விளையாட்டுப் போட்டிகளை துணை மேயர் ரா.வெற்றி செல்வன் முன்னிலையில், மாநகராட்சி ஆணையாளர் M. சிவகுரு பிரபாகரன் இன்று (25.07.2024) கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இப்போட்டிகள் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்திய மண்டலம் மற்றும் பிரதானம் என ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மேற்காணும் மண்டலங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அந்தந்த மண்டலங்களுக்காக இப்போட்டிகளில் பங்கு பெறுகின்றனர்.



ஆண்களுக்கான குழு விளையாட்டுப் போட்டிகளில் கால்பந்து, கிரிக்கெட், சதுரங்கம், கேரம், இறகு பந்து, கையுந்து பந்து ஆகிய ஆறு குழு விளையாட்டுப் போட்டிகளும், பெண்களுக்கான குழு விளையாட்டு போட்டிகளில் எறிபந்து, இறகு பந்து, கேரம், சதுரங்கம், வளைய பந்து ஆகிய ஐந்து குழு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகிறது.

தடகள போட்டிகளில் 100-மீட்டர், 200மீட்டர், 400-மீட்டர், 600-மீட்டர், 1500 மீட்டர் (நடை), நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 4x100 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் 40 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடைபெறுகிறது.



1500 மீட்டர் நடை போட்டியில் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் பங்கு பெறலாம். ஒரு போட்டியாளர் தடகள பிரிவில் ஏதேனும் இரண்டு போட்டிகளிலும் ஒரு தொடர் ஓட்டம் போட்டியிலும் பங்கு பெறலாம். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் அதிகப்படியான போட்டியாளர்கள் பங்கேற்பின் அவர்கள் ஓடிய மணித்துளியின் அடிப்படையில் வெற்றியாளர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

40 வயதிற்கு உட்பட்டவர்கள் பங்குபெறும் விளையாட்டு போட்டிகள் இன்றைய தினம் (25.07.2024) மற்றும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் பங்குபெறும் விளையாட்டு போட்டிகள் 27.07.2024 அன்றும் நடைபெற உள்ளது.



இந்நிகழ்வின்போது மண்டலக் குழுத்தலைவர்கள் வேகதிர்வேல் (வடக்கு), மீனாலோகு (மத்தியம்), நிலைக்குழுத் தலைவர்கள் பெ.மாரிச்செல்வன் (பொது சுகாதாரம்), சந்தோஷ் (நகரமைப்பு குழு), மாமன்ற உறுப்பினர்கள், செல்வராஜ், அழகுஜெயபாலன், மண்டல உதவி ஆணையர்கள் ஸ்ரீதேவி (வடக்கு), முத்துச்சாமி (கிழக்கு), இளங்கோவன் (தெற்கு), சந்தியா (மேற்கு), செயற்பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...