கோவையில் காட்டுப்பன்றி இறைச்சி விற்பனை முயற்சி: இருவருக்கு ரூ.60,000 அபராதம்

கோவை மாங்கரை அருகே வாகனம் மோதி இறந்த காட்டுப்பன்றியின் இறைச்சியை விற்க முயன்ற இரண்டு நபர்களுக்கு வனத்துறை ரூ.60,000 அபராதம் விதித்தது. 15 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.


Coimbatore: கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட மாங்கரை அருகே, ஆனைகட்டி - கோவை சாலையில் வாகனம் மோதி காட்டுப்பன்றி ஒன்று நேற்று (ஜூலை 24) உயிரிழந்தது.

இந்த சம்பவத்தைப் பார்த்த தடாகம் குட்டவெளியைச் சேர்ந்த மருதாசலம் மற்றும் ரங்கநாதன் ஆகியோர், இறந்த காட்டுப்பன்றியை எடுத்துச் சென்று அதனை வெட்டி கூறு போட்டனர். பின்னர் அந்த இறைச்சியை விற்பனை செய்ய முயன்றனர்.

இதனைக் கவனித்த அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை பணியாளர்கள், இவ்விருவரையும் பிடித்து கோவை வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

வனத்துறை அதிகாரிகள் அவர்களிடமிருந்து 15 கிலோ காட்டுப்பன்றி இறைச்சியைப் பறிமுதல் செய்தனர். மேலும், சட்டவிரோதமாக வனவிலங்கு இறைச்சியை விற்க முயன்றதற்காக இருவருக்கும் தலா ரூ.30,000 வீதம் மொத்தம் ரூ.60,000 அபராதம் விதிக்கப்பட்டது.

வனவிலங்குகளை வேட்டையாடுவது, அவற்றின் இறைச்சியை விற்பனை செய்வது ஆகியவை இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...