கோடநாடு வழக்கு: கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் தீபு மற்றும் உதயகுமார் விசாரணை

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த தீபு மற்றும் உதயகுமார் கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்கள். ஏ.டி.எஸ்.பி. முருகவேல் தலைமையிலான குழு விசாரணை நடத்தியது.


Coimbatore: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த தீபு மற்றும் உதயகுமார் ஆகியோர் இன்று கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்கள்.

கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி. முருகவேல் தலைமையிலான காவல் துறையினர் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.



2017ஆம் ஆண்டு நிகழ்ந்த கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த வழக்கில் 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட தீபு மற்றும் 7வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள உதயகுமார் ஆகியோருக்கு ஜூலை 25 அன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி இன்று இருவரும் விசாரணைக்காக ஆஜரானார்கள்.

மேலும், ஜம்ஷீர் அலி மற்றும் ஜித்தின் ஜாய் ஆகியோர் ஜூலை 30 அன்று கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மொத்தம் 12 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...