காண்டூர் கால்வாய் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க கோரி விவசாயிகள் போராட்டம்

பொள்ளாச்சியில் உள்ள பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். காண்டூர் கால்வாய் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க கோரிக்கை வைத்தனர்.


கோவை: பொள்ளாச்சியில் உள்ள பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். காண்டூர் கால்வாயில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட கோரி இந்த போராட்டம் நடைபெற்றது.



பொள்ளாச்சி மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சோலையாறு, பரம்பிக்குளம் ஆகிய பாசன திட்ட அணைகளில் சேகரிக்கப்படும் தண்ணீர் காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த தண்ணீர் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைகள் நிரம்பி நீர்வரத்தும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் காண்டூர் கால்வாயில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.



இந்த பிரச்சினையை தீர்க்க கோரி, பொள்ளாச்சியில் உள்ள பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்திற்குட்பட்ட காங்கயம், வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட செயல் பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் அதிகாரிகள் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.



அதிகாரிகள் தரப்பில், ஆகஸ்ட் 5ஆம் தேதிக்குள் பணிகளை நிறைவு செய்து, காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்கப்படும் எனவும், ஆகஸ்ட் 15ம் தேதிக்கு மேல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர். ஆனால், அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்க மறுத்த விவசாயிகள் தொடர்ந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...