காங்கேயம் அருகே கிராம நிர்வாக அலுவலகத்தில் பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நிழலி கிராமத்தில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவிற்கான இடம் பொருத்தமற்றது என்று கூறி 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கிராம நிர்வாக அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள நிழலி கிராமத்தில், கடந்த 4 வருடங்களாக இலவச வீட்டுமனை பட்டா வழங்காமல் இருந்த தமிழக அரசு, 5 மாதங்களுக்கு முன்பு பட்டா வழங்கியது. ஆனால், வழங்கப்பட்ட பட்டாவிற்கான இடத்தை ஆய்வு செய்வதில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நிழலி ஊராட்சிக்கு உட்பட்ட புள்ளகாளிபாளையம் பகுதியில் 25க்கும் மேற்பட்ட அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் சொந்த வீடுகள் இல்லாத நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக இலவச வீட்டுமனை பட்டா கோரி போராடி வந்தனர். இதையடுத்து, கடந்த மார்ச் 8 ஆம் தேதி 20க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இலவச பட்டா வழங்கியது.

ஆனால், பட்டா வழங்கி 5 மாதங்கள் கடந்தும் இடம் ஒதுக்கப்படவில்லை. தற்போது ஒதுக்கப்பட்ட இடம் பொதுமக்கள் வாழ்வதற்கு தகுதியற்றது என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக் கொடுக்க நிதி ஒதுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.



இந்நிலையில், பொதுமக்கள் விரும்பாத இடத்தில் வீடு கட்ட நிதி ஒதுக்கியதாக கூறி மாவட்ட நிர்வாகத்தையும் தமிழக அரசையும் கண்டித்து, கிராம நிர்வாக அலுவலகத்தில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காங்கேயம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...