கோவை பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் அயல்மொழி மையம் தொடக்கம்

கோவை கனியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் அயல்மொழி மையம் தொடங்கப்பட்டது. மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான இந்த மையம் உலகளாவிய வாய்ப்புகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கோவை: கோவை கனியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் அயல்மொழி மையம் தொடங்கப்பட்டது. இன்றைய உலகமயமாக்கப்பட்ட உலகில் மொழித் திறனின் முக்கியத்துவத்தை அங்கீகரித்து பார்க் கல்வி நிறுவனங்கள் குழுமம் இந்த மையத்தை தொடங்கியுள்ளது.

கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் பார்க் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு இயக்குநர் Dr. பிரின்ஸ் அனைவரையும் வரவேற்றார். மாணவர்களை உலகளாவிய தளத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில் வளாகத்தில் அயல்மொழி மையம் திறக்க அனுமதி வழங்கியதற்காக பார்க் நிறுவனங்களின் CEO Dr. அனுஷா ரவிக்கு நன்றி தெரிவித்தார்.

பார்க் நிறுவனங்களின் பொது மேலாளர் சதீஷ் குமார், குழுமத்தின் மூன்று பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்களான Dr. D. லட்சுமணன், Dr. சக்திவேல் முருகன், Dr. குமரேசன் ஆகியோர் கூட்டத்தில் வாழ்த்துரை வழங்கினர்.

இந்த நிகழ்வில் பேசிய பார்க் நிறுவனங்களின் CEO Dr. அனுஷா ரவி, இத்தகைய மையம் சில ஆண்டுகளாக தனது கனவாக இருந்ததாகக் கூறினார். மாணவர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தி தொழில் வாழ்க்கையில் உயர்ந்த நிலைகளை அடைய வேண்டும் என்று அறிவுறுத்தினார். 10 ஆண்டுகளுக்கு முன்பு 1 கோடி சம்பள தொகுப்பை பெற்ற அவர்களின் முன்னாள் மாணவர் கமலேஷின் சாதனையை நினைவுகூர்ந்தார்.

மாணவர்கள் கூடுதல் மொழிகளை விருப்பத்துடன் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். அமெரிக்காவில் அனைத்து மாணவர்களும் தங்கள் பாடத்திட்டத்தில் 3 கூடுதல் மொழிகளைக் கற்க வேண்டும் என்ற தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

மேலும், அயல்மொழி மையம் அனைத்து 4 ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கும் திறந்திருக்கும் என்றும், ஆசிரியர்களையும் இந்த பாடநெறியில் சேர ஊக்குவித்தார்.

இந்த நிகழ்வின் போது, மாணவர்களின் புத்தாக்கங்களுக்கு காப்புரிமை பெற உதவுவதற்கும், தொழில்முனைவோருக்கு உதவுவதற்கும் கல்லூரியில் Incubation மையம் அமைக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் முடிவில், பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள அயல்மொழி புத்தகத்தை Dr. அனுஷா ரவி வெளியிட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...