கோவையில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்: நா.கார்த்திக் தொடங்கி வைத்தார்

கோவை 36வது வார்டில் திமுகவின் 'இல்லந்தோறும் இளைஞரணி' உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் முகாமைத் தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாநகராட்சியின் 36வது வார்டில் திமுகவின் 'இல்லந்தோறும் இளைஞரணி' உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்த முகாமை கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கரத்தை வலுப்படுத்தும் வகையில், கழக இளைஞரணிச் செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில், "இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாம்" தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர் மாவட்டத்தில் ஏற்கனவே "இல்லந்தோறும் இளைஞர் அணி" உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜூலை 25 அன்று கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் வடவள்ளி பகுதியில் உள்ள 36வது வார்டில் இந்த முகாம் நடைபெற்றது.



வடவள்ளி காமாட்சி அம்மன் கோவில் மற்றும் ராமசாமி பிள்ளை வீதி பகுதிகளில் நடைபெற்ற இந்த முகாமை, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தொடங்கி வைத்தார்.

கோவை மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இரா.தனபால், துணை அமைப்பாளர்கள் கோவை அருண், லாரா பிரேம்தேவ், துரை பிரவீன் ஆகியோரின் மேற்பார்வையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் வட்டக்கழகச் செயலாளர்களான விஸ்வநாதன், வேலுச்சாமி, பாலகிருஷ்ணன், கதிரேசன், தெய்வம் மகாலட்சுமி, மாமன்ற உறுப்பினர் லட்சுமி, அணிகளின் அமைப்பாளர்கள் வி.மணி, ராஜ்குமார் உள்ளிட்ட கழக அனைத்து நிர்வாகிகள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள், பகுதி, வட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள், இளைஞர்கள் மற்றும் கழக உடன்பிறப்புக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...