துடியலூர் அருகே வீட்டில் 10 பவுன் நகை மற்றும் ரூ.25,000 பணம் கொள்ளை

கோவை துடியலூர் அருகே அப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை, ரூ.25,000 பணம் கொள்ளையடிக்கப்பட்டது. குடும்பம் திருப்பதி சென்றிருந்த போது இச்சம்பவம் நடந்துள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ள அப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் கதவை உடைத்து 10 பவுன் நகை மற்றும் ரூ.25,000 பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து கிடைத்த விவரங்களின்படி, துடியலூர் அப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பக்தவச்சலம் (70). இவர், கடந்த ஜூலை 23ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருப்பதி சென்றார். பின்னர் அங்கிருந்து ஜூலை 25ஆம் தேதி கோவை திரும்பினர்.

வீட்டிற்கு திரும்பிய பக்தவச்சலம், கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டார். உள்ளே சென்று பார்த்தபோது, உடைமைகள் சிதறி கிடந்தன. பீரோவில் வைத்திருந்த தங்க வளையல், செயின், பிரேஸ்லெட் உள்ளிட்ட 10 பவுன் நகை மற்றும் ரூ.25,000 மதிப்பிலான வெள்ளி பொருட்கள் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இச்சம்பவம் குறித்து பக்தவச்சலம் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...