கோவையில் முதல் முறையாக மகளிர் சுய உதவிக் குழுவிற்கு நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் ட்ரோன் வழங்கப்பட்டது

கோவை மாவட்டத்தில் முதல் முறையாக நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் பத்ரகாளி அம்மன் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த வசந்தாமணிக்கு ட்ரோன் வழங்கப்பட்டது. இது விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும்.



Coimbatore: கோவை மாவட்டத்தில் முதல் முறையாக நமோ ட்ரோன் தீதி à®¤à®¿à®Ÿà¯à®Ÿà®¤à¯à®¤à®¿à®©à¯ கீழ் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்ணுக்கு ட்ரோன் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை அறிவித்த நமோ ட்ரோன் தீதி à®¤à®¿à®Ÿà¯à®Ÿà®¤à¯à®¤à®¿à®©à¯ கீழ், நாடு முழுவதும் 15,000 ட்ரோன்கள் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட உள்ளன. இதற்காக 1261 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, நாடு முழுவதும் 1095 மகளிர் சுய உதவிக் குழுப் பெண்களுக்கு விவசாயத்திற்குப் பயன்படுத்தக்கூடிய ட்ரோன் பயிற்சி மற்றும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.



தமிழ்நாட்டில் 44 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி மற்றும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி (வடக்கு) வட்டாரம் ராமபட்டினம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் பத்ரகாளி அம்மன் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த வசந்தாமணிக்கு ட்ரோன் பயிற்சி மற்றும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோனின் மதிப்பு சுமார் 6 முதல் 8 லட்சம் ரூபாய் ஆகும்.



வசந்தாமணி தனது பகுதியில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். அவருக்கு சென்னையில் ட்ரோன் பயிற்சியும், உரிமமும் வழங்கப்பட்டுள்ளது. இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ட்ரோனை இயக்கிக் காண்பித்தார்.

இந்த ட்ரோன் மூலம் வயல்வெளிகளில் திரவ உரங்கள், இயற்கை சார்ந்த மீன் அமிலம் போன்ற பொருட்களைத் தெளிக்க முடியும். மேலும், இந்த ட்ரோனை விவசாயிகளுக்கு வாடகைக்கு விடலாம். இதன் மூலம் மகளிர் சுய உதவிக் குழுவிற்கும், PLF கூட்டமைப்பிற்கும் வருமானம் கிடைக்கும். அதே நேரத்தில் விவசாயிகளுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...