கோவை மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்: நாளை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அழைப்பு

கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், நாளை நடைபெறும் பாஜக அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க அனைத்து நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.


Coimbatore: கோவை வடகோவை கிராஸ்கட் சாலையில் உள்ள கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில், கோவை மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 26) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) தலைமை வகித்தார்.

கூட்டத்தில் பேசிய நா.கார்த்திக், ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை வஞ்சித்து பாசிச பாஜக அரசைக் கண்டித்து, நாளை (ஜூலை 27) காலை 10 மணியளவில் கோவை சிவானந்தா காலனி, டாடாபாத் மைதானத்தில் நடைபெற உள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகர் மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமைக் கழக நிர்வாகிகள், கழக நாடாளுமன்ற உறுப்பினர், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், அனைத்து கழக நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், அணிகளின் நிர்வாகிகள், அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அனைத்து கழகத் தொண்டர்கள், அனைத்து கழக செயல்வீரர்கள், BLA-2, பாக முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டார்.



இந்நிகழ்வில் மாவட்ட துணைச்செயலாளர் கோட்டை அப்பாஸ், கழக தொழிலாளர் அணி துணைச் செயலாளர் Lpf தமிழ்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி.எஸ்.பி.கண்ணப்பன், ஆனந்தகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் மகுடபதி, இரா.மணிகண்டன், மு.ம.ச.முருகன், ச.குப்புச்சாமி, ஆடிட்டர் சசிக்குமார், நோயல் செல்வம், சரஸ்வதி புஷ்பராஜ், ச.கார்த்திகேயன், பகுதி கழக செயலாளர்கள் எஸ்.எம்.சாமி, ஷேக் அப்துல்லா, மா.நாகராஜ், இரா.சேரலாதன், மார்க்கெட் எம். மனோகரன், வி.ஐ.பதுருதீன், கோவை லோகு, அஞ்சுகம் பழனியப்பன், வம.சண்முகசுந்தரம், கே.பாக்கியராஜ், கே.எம்.ரவி, எ.எம்.கிருஷ்ணராஜ், அணிகள் அமைப்பாளர்கள் இரா.தனபால், சிவப்பிரகாஷ், டெம்போ சிவா, கராத்தே அர்ஜூன், ஆர்.கே.சுரேஷ்குமார், நா.பாபு, வழக்கறிஞர் அன்புச் செழியன், சிஆர்.கனிமொழி, மருதமலை ராஜ்குமார், அக்ரி பாலு, பூர்ணசந்திரன், வி.மணி, இலா.தேவசீலன், ஸ்ரீசத்யா கோவை தங்கம், எம்எம்.சஞ்சய்குமார், டி.கண்ணன் மற்றும் அணிகளின் துணை அமைப்பாளர்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...