கோவை விமான நிலையத்திற்கு தீரன்சின்னமலை கவுண்டர் பெயர் சூட்ட வேண்டுகோள்

நாமக்கல் எம்பி VS.மாதேஸ்வரன் டெல்லியில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை சந்தித்து, கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு தீரன்சின்னமலை கவுண்டர் பெயர் சூட்ட வேண்டுகோள் விடுத்தார்.



நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் VS.மாதேஸ்வரன் இன்று டெல்லியில் மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடுவை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, கோவை விமான நிலையத்திற்கு தீரன்சின்னமலை கவுண்டர் விமான நிலையம் என பெயர் சூட்டுவது தொடர்பாக மனு ஒன்றை அளித்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு, இந்த விஷயத்தை அமைச்சரவையில் விவாதித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்த சந்திப்பு கோவை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...