கோவையில் ₹3 லட்சம் மதிப்புள்ள தங்கச் செயினை மீட்டு தந்த தூய்மை பணியாளர்களுக்கு மாமன்றத்தில் பாராட்டு

கோவை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் குப்பையில் தவறவிடப்பட்ட ₹3 லட்சம் மதிப்புள்ள தங்கச் செயினை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இந்த நேர்மையான செயலுக்காக மாமன்றக் கூட்டத்தில் அவர்கள் பாராட்டப்பட்டனர்.


கோவை: கோவை மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் ₹3 லட்சம் மதிப்புள்ள தங்கச் செயினை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது. இந்த நேர்மையான செயலுக்காக அவர்கள் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பாராட்டப்பட்டனர்.

கோவைப்புதூர், 91வது வார்டைச் சேர்ந்த சிவகாமி என்ற பெண், கடந்த மாதம் தனது 6 பவுன் எடையுள்ள தங்கச் செயினை தவறுதலாக குப்பைகளுடன் சேர்த்து கொடுத்துவிட்டார். இது குறித்து தனது நண்பர் சக்திவேலிடம் தெரிவித்த சிவகாமி, அவர் மூலம் 98வது வார்டு கவுன்சிலர் உதயகுமாருக்கு தகவல் தெரிவித்தார்.



உடனடியாக செயல்பட்ட கவுன்சிலர் உதயகுமார், சம்பவம் நடந்த பகுதியின் துப்புரவு மேற்பார்வையாளர் மணிகண்டனை தொடர்பு கொண்டு உதவி கோரினார். அதன் பேரில், குப்பை வண்டியில் இருந்த டன் கணக்கான குப்பைகளை கீழே இறக்கி, ஆறு மணி நேர தீவிர தேடுதலுக்குப் பின் தவறவிடப்பட்ட தங்கச் செயின் மீட்கப்பட்டது.

இந்த மீட்பு பணியில் ஈடுபட்ட ராணி, சத்யா சாவித்திரி உள்ளிட்ட தூய்மை பணியாளர்களின் நேர்மையான செயலுக்காக கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களாலும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன.

98வது வார்டு கவுன்சிலர் உதயகுமார் கூறுகையில், "நேர்மையாகவும் உண்மையாகவும் செயல்பட்ட தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் மாமன்றக் கூட்டத்தில், அவர்களது பெயர்கள் கூறப்பட்டு, அனைத்து மாமன்ற உறுப்பினர்களாலும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டன" என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...