சிங்காநல்லூரில் சண்டையிட்ட சாரை பாம்புகள் மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிப்பு

கோவை சிங்காநல்லூரில் பொதுவெளியில் சண்டையிட்ட இரண்டு சாரை பாம்புகள் பாம்பு பிடி நிபுணரால் மீட்கப்பட்டு, வனத்துறையின் உதவியுடன் பாதுகாப்பாக அவற்றின் வாழ்விடத்தில் விடுவிக்கப்பட்டன.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சிங்காநல்லூர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியது. செடிகளை ஒட்டிய பொதுவெளியில் இரண்டு சாரை பாம்புகள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தன.



இந்த அசாதாரண காட்சியைக் கண்ட பொதுமக்கள், உடனடியாக பாம்பு பிடி நிபுணர் மோகனுக்கு தகவல் தெரிவித்தனர்.



தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மோகன், மிகுந்த கவனத்துடன் சண்டையிட்டுக் கொண்டிருந்த பாம்புகளை பிரித்து, அவற்றை பாதுகாப்பாக பிடித்தார். பின்னர் அவற்றை ஆய்வு செய்தபோது, அவை விஷமற்ற சாரை பாம்புகள் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, பாம்புகளை பாதுகாப்பான முறையில் ஒரு பையில் அடைத்து வைத்தார்.

இந்த சம்பவம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில், மீட்கப்பட்ட சாரை பாம்புகள் அவற்றின் இயற்கை வாழ்விடமான காட்டுப் பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டன.

இந்த சம்பவம் குறித்து பாம்பு பிடி நிபுணர் மோகன் பேசுகையில், "சாரைப் பாம்புகள் விஷமற்றவை. இவை முக்கியமாக எலிகளை வேட்டையாடி உண்பதால், விவசாயிகளின் நண்பன் என்றும் அழைக்கப்படுகின்றன. சாரைப் பாம்புகள் உள்ள பகுதிகளில் எலித் தொல்லையோ, எலிகளால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகளோ இருக்காது," என்று விளக்கினார்.

மேலும் அவர், "சாரைப் பாம்புகள் விவசாய நிலங்களில் பயிர்களைச் சேதப்படுத்தும் எலிகளை கட்டுப்படுத்துவதால், இவை விவசாயத்திற்கு மிகவும் முக்கியமானவை. பொதுமக்கள் சாரைப் பாம்புகளைக் கண்டால், அவற்றை அடிக்கவோ விரட்டவோ கூடாது. மாறாக, வனத்துறை அல்லது பாம்பு பிடி நிபுணர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

இறுதியாக, "சாரைப் பாம்புகள் உட்பட அனைத்து வகை பாம்புகளும் சுற்றுச்சூழல் சமநிலைக்கு மிக முக்கியமானவை. அவற்றை பாதுகாப்பது நமது கடமை," என்று மோகன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...