தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நானோபோர் வரிசைப்படுத்துதல் பயிலரங்கம் நடைபெற்றது

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நானோபோர் வரிசைப்படுத்துதல் குறித்த ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்கள் கலந்துகொண்டு வேளாண் ஆராய்ச்சியில் புதிய தொழில்நுட்பங்களின் பங்களிப்பு குறித்து விவாதித்தனர்.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர்த் தொழில்நுட்பவியல் மையம் இன்று (26.07.2024) நானோபோர் வரிசைப்படுத்துதல் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடத்தியது. இந்த பயிலரங்கத்தில் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

உயிர்த்தொழில்நுட்பவியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் ஈ.கோகிலாதேவி வரவேற்புரை வழங்கினார். கார்டிவா அக்ரி நிறுவனத்தின் விதை ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றத் துறையின் தலைவர் முனைவர் ராமன் பாபு மற்றும் Zelle Biotechnology Pvt Ltd -ன் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் இயக்குனர் முனைவர் தே.சுரேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பங்கேற்பாளர்களுக்கு பயிற்சி சான்றிதழ்களை வழங்கினார். அவர் வேளாண் ஆராய்ச்சியில் புதிய தொழில்நுட்பங்களின் பங்கு மற்றும் அவற்றின் மூலம் வேளாண் மாணவர்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது குறித்தும் விவாதித்தார்.

தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர்த்தொழில்நுட்பவியல் மையத்தின் இயக்குனர் முனைவர் ந.செந்தில் தனது அறிமுக உரையில், மூலக்கூறு வரிசைப்படுத்துதலின் முக்கியத்துவத்தையும், பொது மற்றும் தனியார் துறையின் கூட்டு முயற்சியின் மூலம் ஆராய்ச்சி முடிவுகளை மேம்படுத்துவது குறித்தும் எடுத்துரைத்தார்.

முனைவர் ராமன் பாபு, தெற்காசியா, கார்டேவா அக்ரிசயின்ஸ், ஹைதராபாத் மற்றும் பயிற்சிப் பேராசிரியர் (தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம்), தற்போதைய போக்குகள், தாவர வளர்ப்பில் மேம்பாடுகள் மற்றும் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் குறித்து விரிவாக விளக்கினார். அவர் தற்போதைய ஆராய்ச்சியில் உள்ள ஐந்து வெவ்வேறு முன்னுதாரண மாற்றங்களைப் பற்றியும் குறிப்பிட்டார்.

குறுகிய காலத்தில் பெற்றோர் பொருள் மேம்பாடு, மரபணு தேர்வு, டிஜிட்டல் கருவிகள் மூலம் பினோடைப்பிங், டிஜிட்டல் விவசாயம், ஜீனோம் எடிட்டிங், ஸ்டெம் செல் ஆராய்ச்சி மற்றும் திசு பொறியியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சிகளை மேம்படுத்தலாம் என்று அவர் கூறினார். மேலும், மாணவர்கள் சிறந்த வேலை வாய்ப்புகளுக்காக இத்துறைகளில் சிறப்புத் திறன்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

தொழில்துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் டாக்டர். திவ்யா ஷெட்டி, Zelle Biotechnology Pvt Ltd-ன் மூத்த கள பயன்பாட்டு விஞ்ஞானி, ஆக்ஸ்போர்டு நானோபூர் மற்றும் இல்லுமினா வரிசைமுறை மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்தும், டாக்டர் ரமேஷ் வைத்தியநாதன், ட்விஸ்ட் பயோசயின்ஸின் வணிக வளர்ச்சி மேலாளர், செயற்கை உயிரியலின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்தும் விரிவான உரைகளை வழங்கினர்.

நிகழ்ச்சியின் முடிவில், தாவர உயிரித் தொழில்நுட்பத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் எம்.சுதா நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...