கோவை: தங்கையை தவறாக பேசிய நண்பரை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபர் கைது

கோவை சூலூர் அருகே மது போதையில் தங்கையை தவறாக பேசிய நண்பனை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் ஓடக்கல்பாளையத்தில் நடந்தது.


கோவை: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள ஓடக்கல்பாளையத்தில் மது போதையில் தங்கையை தவறாக பேசிய நண்பனை கல்லால் அடித்துக் கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு வெளியே காட்டுப்பகுதியில் ஆண் சடலம் ஒன்று தலையில் காயங்களுடன் கிடப்பதாக சுல்தான்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விசாரணையில் இறந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி மாரப்பனின் மகன் பரமசிவம் (28) என்பது தெரியவந்தது. கோழிப்பண்ணையில் வேலை பார்த்து வந்த பரமசிவம் சில மாதங்களாக பணிக்குச் செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றி, இரவு நேரத்தில் காட்டுப் பகுதியில் மது அருந்துவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக தெரியவந்தது.

போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளியைத் தேடி வந்த நிலையில், ஓடக்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த வரதராஜன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில், பரமசிவம் குடிபோதையில் தன் தங்கையை தவறாக பேசியதால் கல்லால் அடித்துக் கொன்றதாக வரதராஜன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சம்பவத்தன்று பரமசிவம், வரதராஜன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் மது அருந்தச் சென்றனர். பார்த்திபன் மட்டும் வீடு திரும்பிய நிலையில், பரமசிவமும் வரதராஜனும் தொடர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். போதை தலைக்கேறிய நிலையில், வரதராஜனின் தங்கை குறித்து பரமசிவம் தவறாகப் பேசியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த வரதராஜன் பரமசிவத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட, வரதராஜன் அருகில் இருந்த கல்லை எடுத்து பரமசிவத்தின் தலையில் பலமாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த பரமசிவம் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்ற வரதராஜன் கடந்த சில தினங்களாக வதம்பச்சேரி சுற்று வட்டார பகுதிகளில் சுற்றித்திரிந்து வந்த நிலையில் சுல்தான்பேட்டை போலீசார் அவரைக் கைது செய்துள்ளனர்.

தற்போது வரதராஜனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...