கோவை காவல்துறை அதிகாரிகளுக்கு 9 மி.மீ பிஸ்டல் துப்பாக்கி சூடும் பயிற்சி

கோவை அவினாசி ரோடு காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் 71 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு 9 மி.மீ பிஸ்டல் துப்பாக்கி சூடும் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சி கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனின் அறிவுறுத்தலின் பேரில் நடத்தப்பட்டது.


கோவை: கோவை அவினாசி ரோடு காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு துப்பாக்கி பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சி கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணனின் அறிவுறுத்தலின் பேரில் நடத்தப்பட்டது.

கோவை ரைபிள் கிளப்பில் நடைபெற்ற இப்பயிற்சியில், எஸ்.ஐ முதல் ஏ.சி., எஸ்.பி வரையிலான கோவை மாநகர காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இவர்களுக்கு 9 மி.மீ பிஸ்டல் துப்பாக்கி சூடும் பயிற்சி அளிக்கப்பட்டது.



இப்பயிற்சியில் மொத்தம் 71 பேர் பங்கேற்றனர். இதில் 9 ஏ.சி. எஸ்.பி., 22 இன்ஸ்பெக்டர்கள், மற்றும் 40 எஸ்.ஐ.க்கள் அடங்குவர்.



பயிற்சிக்கு முன்னதாக, பங்கேற்பாளர்களுக்கு துப்பாக்கி தொடர்பான அடிப்படை விஷயங்கள் குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டது.



கடந்த சில நாட்களுக்கு முன்னர், பங்கேற்பாளர்களுக்கு துப்பாக்கியின் பாகங்களை பிரித்து இணைத்தல், துப்பாக்கியை ஏற்றுதல் மற்றும் இறக்குதல், இலக்கு பார்த்து சுடுதல், துப்பாக்கியை சுத்தம் செய்தல் மற்றும் பராமரித்தல், மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...