கோவை பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் கார்கில் வெற்றி நினைவு தினம் கொண்டாட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் கார்கில் வெற்றி 25வது ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்டது. முன்னாள் ராணுவ அதிகாரி Lt.Col. ஆர்.வி.கிரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கார்கில் வெற்றியின் 25வது ஆண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்டது. அகில பாரதிய பூர்வ சைனிக் சேவா பரிஷத் உடன் இணைந்து இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.



நிகழ்ச்சியில் கார்கில் போரில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கல்லூரியின் தேசிய மாணவர் படை அதிகாரி கேப்டன் நீலகண்டன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் முத்துசாமி தலைமை உரையாற்றினார்.



கார்கில் போரில் பங்கு பெற்ற முன்னாள் ராணுவ அதிகாரி Lt.Col. ஆர்.வி.கிரி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் கார்கில் போர் குறித்தும், இந்திய ராணுவ வீரர்களின் சேவை மற்றும் தியாகம் குறித்தும் சிறப்புரையாற்றினார். மேலும், மாணவர்களுக்கு நாட்டின் முப்படையில் உள்ள படைப்பிரிவுகள் குறித்தும், இந்திய இராணுவத்தில் அதிகாரிகளாக இணைய உள்ள வாய்ப்புகள் குறித்தும் விளக்கினார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில், Lt.Col. ஆர்.வி.கிரி அவர்களுக்கு கல்லூரியின் தேசிய மாணவர் படை சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கல்லூரியின் சுயநிதிப் பிரிவு இயக்குநர் முனைவர் ஸ்ரீதர் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் கந்தப்பன், கூட்டுறவுத்துறை தலைவர் முனைவர் வில்சன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் யுவராஜ், பேராசிரியர்கள் பிரகாஷ், கோவிந்தராஜ், சௌந்தர்ராஜ், நந்தகுமார் சந்தான கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

கார்கில் போரில் இந்தியா பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26 அன்று கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 25வது ஆண்டு நினைவு தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...