பொள்ளாச்சியில் வழிப்பறி செய்த இருவர் கைது: 10½ சவரன் தங்க நகை மீட்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட இரு நபர்களை போலீசார் கைது செய்து, பறிக்கப்பட்ட 10½ சவரன் தங்க நகையை மீட்டுள்ளனர். குற்றவாளிகள் கேரளாவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்ட இரு நபர்களை போலீசார் கைது செய்து, பறிக்கப்பட்ட தங்க நகையை மீட்டுள்ளனர்.

கடந்த ஜூலை 24ஆம் தேதி, பொள்ளாச்சியில் வசிக்கும் மகேஸ்வரி (42) என்பவர் வடுகபாளையத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத இரு நபர்கள் அவரது கழுத்திலிருந்த 10½ சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இது தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த அல்லா பிச்சை மகன் அஷ்ரபுதீன் (21) மற்றும் முகமது ரஃபீக் மகன் முகமது ரஃபி (22) ஆகியோர் இக்குற்றத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து, குற்றவாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 10½ சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சட்டத்திற்கு புறம்பான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். பொதுமக்கள் குற்றங்களைத் தடுக்க உதவ வேண்டும் எனவும், சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 அல்லது வாட்சப் எண் 77081-00100 ஐ தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். தகவல் தெரிவிப்போரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...