மாற்றுத்திறனாளிகளுக்காக நூதன முறையில் நன்கொடை திரட்டும் சமூக சேவகர்

திருப்பூரைச் சேர்ந்த சிவசுப்பிரமணி, மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச காப்பகம் கட்ட நூதன முறையில் நன்கொடை திரட்டுகிறார். விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட உடையும் பைக்கும் பயன்படுத்துகிறார்.


திருப்பூர் மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தேசம் காப்போம் அறக்கட்டளையின் உறுப்பினர் அவேர்னஸ் அப்பா என்றழைக்கப்படும் சிவசுப்பிரமணி, மாற்றுத்திறனாளிகளுக்காக நூதன முறையில் நன்கொடை திரட்டி வருகிறார். இந்த அறக்கட்டளை கடந்த 20 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்காக சேவை செய்து வருகிறது.

சிவசுப்பிரமணி சாலை பாதுகாப்பு குறித்தும் பல ஆண்டுகளாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மாற்றுத் திறனாளிகளுக்காக திருப்பூர் மாவட்டத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் இலவச காப்பகம் கட்டுவதே தனது இறுதி ஆசை என்று கூறும் இவர், இதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் சென்று பொதுமக்களிடம் நன்கொடை திரட்டி வருகிறார்.

இவர் அணிந்திருக்கும் உடை மற்றும் பயணிக்கும் பைக் முழுவதும் சாலை பாதுகாப்பு, உடல் நலம் குறித்த பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. "இன்சூரன்ஸ் அவசியம், மிதவேகம் மிக நன்று, ரத்த தானம் சாலைக்கல்ல மனிதருக்கே, உறுப்பு தானம் செய்வோம், முக கவசம் அணிவோம், தோல்தானம் செய்வோம், கொரோனாவில் இருந்து காப்போம், போதை பயணம் தவிர்ப்போம்" போன்ற வாசகங்கள் இவற்றில் அடங்கும்.

"மாற்றுத்திறனாளிகளுக்காக பிச்சை எடுத்தாவது சேவை செய்வேன்" என்ற பேனருடன் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இவர், பொதுமக்களை சந்தித்து திருப்பூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச காப்பகம் அமைப்பதற்கு நன்கொடை திரட்டுகிறார். தற்போது கோவை வந்துள்ள இவர் இங்கும் நிதி திரட்டி வருகிறார்.

இவ்வாறான உடைகளை அணிந்து கொண்டு செல்லும் போது, பொதுமக்கள் தன்னை வித்தியாசமாக பார்ப்பதாகவும், அதிகமானோர் உதவி செய்வதாகவும், சிலர் தன்னை விமர்சிப்பதாகவும் சிவசுப்பிரமணி தெரிவித்தார். இவருக்கு உதவி செய்ய விரும்புவோர் +91 7598691583 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...