அமைச்சர் சு.முத்துசாமி ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டிகள் வழங்கினார்

கோவை ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 26ஆம் தேதி 11ம் வகுப்பு மாணவர்களுக்கு அமைச்சர் சு.முத்துசாமி இலவச மிதிவண்டிகளை வழங்கினார். மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


கோவை: கோவை திருச்சி சாலையில் உள்ள ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி ஜூலை 26 அன்று நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீட்டுவசதித்துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.



இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் மா சிவகுரு பிரபாகரன், மாநகர மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்.எல்.ஏ.), தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன், மாநகராட்சி துணை மேயர் இரா.வெற்றிச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் ஆடிட்டர் சசிகுமார், சிங்காநல்லூர் பகுதி-1 செயலாளர் எஸ்.எம்.சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மாமன்ற உறுப்பினர்கள் சாந்தா மணி பன்னீர்செல்வம், சுமித்ரா தீபக், பகுதி துணைச் செயலாளர் கஸ்தூரி அருண், வட்டக் கழகச் செயலாளர்கள் சுரேஷ் குமார், எல்.பி.எஃப் சண்முகம், ராஜேந்திரன், தி.இளங்கோவன், நெசவாளர் அணி விஸ்வநாதன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...