தாராபுரம் அருகே மூலனூரில் நடைபெற்ற முதலாம் ஆண்டு ரேக்ளா பந்தயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மூலனூரில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் பந்தயத்தை துவக்கி வைத்தார்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் பேரூராட்சி திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு ரேக்ளா பந்தயம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த ரேக்ளா பந்தயத்தை காலை ஏழு மணி அளவில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே இ பிரகாஷ் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

இந்த ரேக்ளா பந்தயம் 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் என இரு பிரிவுகளாக நடைபெற்றது. திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட ரேக்ளா மாட்டு வண்டிகள் பங்கு பெற்றன.



முதலில் நடைபெற்ற 200 மீட்டர் ரேக்ளா பந்தயத்தில் ஏராளமான காளைகள் சீறி பாய்ந்தன. 200 மற்றும் 300 மீட்டர் ரேக்ளா போட்டிகளில் வெற்றி பெற்ற ரேக்ளா பந்தய வீரர்களுக்கு கோப்பைகள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட உள்ளன. இந்த நிகழ்வு மூலனூர் பகுதியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...