மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு முறையாக செயல்படுத்த வேண்டும் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில், மத்திய அரசின் திட்டங்கள், தமிழக அரசின் செயல்பாடுகள், வெள்ளலூர் குப்பை கிடங்கு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விளக்கமளித்தார்.


Coimbatore: கோவையில் புத்தக வெளியீட்டு விழாவிற்காக வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் கிஷன் குமார் ரெட்டியுடன் தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அண்ணாமலை பேசுகையில், "சேலஞ்ச் மாடலின் அடிப்படையில் அனைத்து மாநிலங்களும் போட்டியிட்டதில், ஏழு PM மித்ரா பார்க்குகளில் ஒன்று தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. விருதுநகரில் PM மித்ரா பார்க் அமைந்த பிறகு மாநில அரசு என்ன செய்திருக்கிறது? மத்திய அரசின் திட்டங்களை தமிழக அரசு முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு கொண்டுவருவதில்லை," என்றார்.



அவர் மேலும், "மத்திய அரசின் Production linked incentive (PLI) ஆல் மட்டுமே தமிழகத்திற்கு செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் வருகின்றனர். மதுரை AIIMS மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம், தற்போது பிரச்சனைகள் எல்லாம் முடிந்து, அனுமதி பெற்று வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. 2026 ஆம் ஆண்டு கட்டுமான பணிகள் நிறைவடையும்," என்று கூறினார்.

பட்ஜெட் குறித்து பேசிய அண்ணாமலை, "மத்திய பட்ஜெட்டை பொருத்தவரை, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களின் பெயர்களையே குறிப்பிடவில்லை. மாநிலங்களுக்கு என்ன தேவையோ அது அறிவிக்கப்பட்டுள்ளது," என்றார்.

வெள்ளலூர் குப்பை கிடங்கு விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, "தேசிய பசுமை தீர்ப்பாயம், வெள்ளலூரில் உள்ள குப்பை கிடங்கை அகற்றக்கோரி மத்திய அரசுக்கு இரண்டு முறை உத்தரவிட்டுள்ளது. ஆனால் இரண்டு முறை உத்தரவிட்டும் தமிழக அரசு அந்த உத்தரவை மதிக்கவில்லை," என்று குற்றம் சாட்டினார்.

மின் கட்டணம் குறித்து பேசிய அவர், "தமிழகத்தில் மின் உற்பத்திக்கான செலவை அதிகரித்து வைத்திருக்கிறார்கள். மின் கட்டண விலையை உயர்த்தும்பொழுது அதற்கான பழியை மத்திய அரசின் மீது போட்டு விடுகிறார்கள். மாநில அரசு மின் உற்பத்திக்கான செலவை குறைக்க வேண்டும்," என்று வலியுறுத்தினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...