கோவையில் மகளை அடித்துக் கொன்ற தாய் கைது

கோவையில் 10 வயது மகளை கரண்டியால் அடித்து கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டார். சிறுமியின் உடலில் 33 காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.


Coimbatore: கோவை தெலுங்குபாளையம், மெய்யப்பன் நகரில் வசிக்கும் தட்சிணாமூர்த்தி (39) மற்றும் சாந்தலட்சுமி தம்பதியரின் 10 வயது மகள் அனுஸ்ரீயின் மரணம் தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த மே 17ஆம் தேதி, அனுஸ்ரீ தூக்கத்தில் கட்டிலில் இருந்து விழுந்து மயக்கமடைந்ததாக கூறி, அவரது தாய் சாந்தலட்சுமி அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அனுஸ்ரீ, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

செல்வபுரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சமீபத்தில் வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமியின் உடலில் 33 காயங்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், சாந்தலட்சுமி தனது மகளை அடிக்கடி கரண்டியால் அடித்துள்ளதாக தெரியவந்தது. இந்த அடிகளால் ஏற்பட்ட காயங்களினால் உடல் சதை பாதிக்கப்பட்டு, இரத்தம் வெளியேறி சிறுநீரகத்தை பாதித்து சிறுமி இறந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில், ஜூலை 26ஆம் தேதி சாந்தலட்சுமி கைது செய்யப்பட்டார். அவர் மீது "மரணம் ஏற்படும் என்று தெரியாமல் குற்றத்தை விளைவித்தல்" என்ற சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சாந்தலட்சுமி சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் கோவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...