பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு

பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி, பொள்ளாச்சி நகரப் பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பல லட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.


Coimbatore: பொள்ளாச்சி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி, பொள்ளாச்சி நகர பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி பல லட்ச வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து, தொகுதி வாரியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வரும் அவர், இன்று பொள்ளாச்சி நகரப் பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.



பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு நன்றி தெரிவித்த ஈஸ்வரசாமி, "தமிழகத்தில் எந்த தொகுதிகளிலும் இல்லாத அளவுக்கு பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்ததற்கு நன்றி" என்று தெரிவித்தார். மேலும், வாக்காளர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன், நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...