கோவையில் டிஜிட்டல் டீடாக்ஸ் குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான்

கோவையில் டிஜிட்டல் சாதனங்களின் அதீத பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 3 கிலோமீட்டர் தூரம் வாக்கத்தான் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை ஆர்.எஸ்.புரம் சாஸ்திரி மைதானத்தில் இருந்து துவங்கி, ஆர்.எஸ்புரம் மற்றும் வடகோவை வழியாக 3 கிலோமீட்டர் தூரம் டிஜிட்டல் டீடாக்ஸ் (Digital Detox) குறித்த விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.

இந்த வாக்கத்தானில் கல்லூரி மாணவர்கள், மாணவிகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் மொபைல் போன், டிவி, கம்ப்யூட்டர் போன்ற டிஜிட்டல் சாதனங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதகமான விளைவுகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த வாக்கத்தானின் நோக்கமாகும்.

தற்போது டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்துள்ளதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையாகி விட்டனர். இதனால் பெரும் அளவில் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில், டிஜிட்டல் சாதனங்களை நமது தேவைக்கேற்ப பயன்படுத்தாமல் அதிகளவில் பயன்படுத்துவதால் பல்வேறு மன உளைச்சல்கள் மற்றும் பிரச்சினைகளை இன்றைய தலைமுறையினர் எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த விழிப்புணர்வு வாக்கத்தானில் கலந்து கொண்ட 500க்கும் மேற்பட்டோர் ஒரே மாதிரியான உடை அணிந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். டிஜிட்டல் சாதனங்களை அளவோடு பயன்படுத்தினால் எந்தவித பிரச்சினையும் ஏற்படாது என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்த்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...