ஐ.பி.எஸ் அதிகாரி போல் நடித்து ரூ.2 கோடி மோசடி: இரண்டு பெண்கள் கைது

கோவையில் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்திராகாந்தி மற்றும் கவிப்பிரியா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Coimbatore: கோவை நகரத்தில் மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.2 கோடி மோசடி செய்த இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விவரம் வருமாறு:

சென்னை மேற்கு அண்ணாசாலை பகுதியில் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் நடத்தி வந்தவர் இந்திராகாந்தி. இவரது உதவியாளராக பணியாற்றியவர் கவிப்பிரியா. இவர்கள் இருவரும் மத்திய அரசு பணியில் சேர்த்து விடுவதாக கூறி பலரிடம் பணம் வசூலித்து உள்ளனர். கோவையை சேர்ந்தவர்கள் உள்பட 18 பேர் மொத்தம் ரூ.2 கோடி வரை வேலைக்காக கொடுத்து உள்ளனர்.

ஆனால், இந்திராகாந்தி மற்றும் கவிப்பிரியா ஆகியோர் வேலையும் வாங்கி கொடுக்காமல், பணத்தையும் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர். இந்த மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை நகர மத்திய குற்றப் பிரிவு போலீசில் அண்மையில் புகார் செய்தனர்.

புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து தனிப்படையினர் சென்னை சென்று இந்திராகாந்தியையும், கவிப்பிரியாவையும் நேற்று ஜூலை 27 ஆம் தேதி கைது செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த மோசடியில் இந்திரா காந்தியின் மகள் ரஞ்சனி மற்றும் சிவமலர் ஆகியோரும் தொடர்புடையதாக தெரிய வந்துள்ளது. ரஞ்சனி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று டெல்லியில் மத்திய அரசு பணியில் இருப்பதாகவும், இவர் தான் மத்திய அரசுக்கான பணியில் சேர்த்து விட உதவுகிறார் என்றும் வேலை கேட்டு பணம் கொடுத்தவர்களிடம் கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

கைதான கவிப்பிரியா, தான் சென்னை லஞ்ச ஒழிப்புத் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணி செய்து வருவதாக பலரிடமும் கூறி உள்ளார். இந்த மோசடி தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...