உடுமலையில் அன்பு பாலம் அமைப்பின் 4வது ஆண்டு இலவச பொருட்கள் விநியோகம்

உடுமலையில் அபெக்ஸ் கிளப்பின் அன்பு பாலம் அமைப்பு 4வது ஆண்டாக ஏழை எளிய மக்களுக்கு இலவச பொருட்கள் விநியோகம் செய்தது. சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ராம அய்யர் திருமண மண்டபத்தில் அபெக்ஸ் கிளப்பின் அன்பு பாலம் அமைப்பு சார்பில் 4வது ஆண்டாக இலவச பொருட்கள் விநியோகத் திட்டம் நேற்று காலை தொடங்கியது.

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நல்ல நிலையில் உள்ள ஆடைகள், புத்தகங்கள், பள்ளி பைகள், விளையாட்டு பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் மண்டபத்தில் குவிக்கப்பட்டன. சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மண்டபத்திற்கு வருகை தந்து தங்களுக்கு தேவையான உடைகள் மற்றும் மாணவர்களுக்கான புத்தகங்களை இலவசமாக பெற்றுச் சென்றனர்.



இந்த நிகழ்வில் அபெக்ஸ் தேசிய தலைவர் பிரசாத், மாவட்ட ஆளுநர் ஜெயபால் மற்றும் தேசிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். உடுமலை அபெக்ஸ் தங்கத் தலைவர் கோவிந்தராஜன், உப தலைவர் சந்திரன், செயலாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் மவுன குருசாமி மற்றும் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ராம அய்யர் மண்டப அறக்கட்டளையின் சுப்புராமன் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...