சேலத்தில் ஆகஸ்ட் 16ஆம் தேதி எம்.பி.சி. உரிமை மீட்பு மாநாடு: 24 மணை தெலுங்கு செட்டியார் பேரவை தலைவர் அறிவிப்பு

பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், 24 மணை தெலுங்கு செட்டியார் பேரவை மாநில தலைவர் ஜெகநாத் மிஸ்ரா, ஆகஸ்ட் 16ஆம் தேதி சேலத்தில் எம்.பி.சி. உரிமை மீட்பு மாநாடு நடைபெறும் என அறிவித்தார்.


Coimbatore: 24 மணை தெலுங்கு செட்டியார் பேரவை சார்பில் வருகிற ஆகஸ்ட் 16ஆம் தேதி சேலத்தில் எம்.பி.சி. உரிமை மீட்பு மாநாடு நடத்தப்படுவதாக அப்பேரவையின் மாநில தலைவர் ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி காமாட்சி அம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். இந்தக் கூட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை பகுதிகளைச் சேர்ந்த நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



செய்தியாளர்களிடம் பேசிய ஜெகநாத் மிஸ்ரா, "சேலத்தில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் ஆந்திரா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர்," என்று தெரிவித்தார். மேலும், இந்த மாநாட்டிற்கு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மாநாடு 24 மணை தெலுங்கு செட்டியாருக்கு எம்.பி.சி உரிமை மீட்பு மாநாடாக நடத்தப்படுவதாகவும் ஜெகநாத் மிஸ்ரா உறுதிபடக் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...