உடுமலையில் தோட்டக்கலைத்துறை கருத்தரங்கிற்கு எதிர்ப்பு: விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

உடுமலையில் தோட்டக்கலைத்துறை சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கருத்தரங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் மற்றும் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் மானியத் திட்டங்களின் தாமதம் குறித்து விவசாயிகள் கோபம் தெரிவித்தனர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் தோட்டக்கலைத்துறை சார்பில் இரண்டு நாள் மாவட்ட அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர். கடந்த சில மாதங்களாக தோட்டக்கலைத்துறையின் செயல்பாடுகளால் விவசாயிகளுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்றும், தமிழக அரசின் மானியத் திட்டங்கள் குறித்த தகவல்கள் உரிய நேரத்தில் விவசாயிகளை சென்றடையவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.



பயிர்கள் சேதமடைந்தால் இழப்பீடு வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளதாகவும், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் தென்னை வாடல் நோய் அதிகரித்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர். இந்நோயைக் கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

மேலும், விவசாயிகள் பயிர் பாதிப்பு குறித்து புகார் அளித்தால், அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்வதில்லை என்றும் கூறினர். எனவே, விவசாயிகள் பாதிப்பு குறித்து தெரிவித்தால், தோட்டக்கலை அதிகாரிகள் உடனடியாக கள ஆய்வுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

உடுமலையில் நடைபெற்ற தோட்டக்கலைத்துறை கருத்தரங்கிற்கு எதிராக விவசாயிகள் நடத்திய இந்த போராட்டம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...