கோவை TNAU-வில் R-நிரலாக்கத்துடன் தரவு பகுப்பாய்வு பயிற்சி

கோவை TNAU-வில் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை R-நிரலாக்கத்துடன் தரவு பகுப்பாய்வு மற்றும் காட்சிப்படுத்தலுக்கான 5 நாள் செயல்சார் பயிற்சி நடைபெற்றது. பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தொழில்நுட்ப மைய இயக்குநரகத்தின் கீழ் இயங்கும் தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரியல் தகவல் துறை சார்பில் R-நிரலாக்கத்துடன் (R-Programming) தரவு பகுப்பாய்வு (Data processing) மற்றும் காட்சிப்படுத்தலுக்கான ஐந்து நாள் செயல்சார் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சி 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 முதல் ஆகஸ்ட் 2 தேதி வரை நடத்தப்பட்டது.

இப்பயிற்சியில் கோளூர் ஆராய்ச்சி பண்ணை (பெங்களூர்), பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரி (கோழிக்கோடு), கலசலிங்கம் அகாடமி ஆஃப் ரிசர்ச் அண்ட் எஜுகேஷன் (கிருஷ்ணன்கோயில்), ICAR-கரும்பு வளர்ப்பு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர்.



தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர் தகவலியல் துறையின் பேராசிரியரும் தலைவருமான முனைவர் ஏ. ஜான் ஜோயல் வரவேற்புரை வழங்கினார். ஆராய்ச்சியில் தரவு பகுப்பாய்வு மற்றும் R நிரலாக்கத்தின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி ஆய்வு மைய இயக்குநரும், முதுநிலைப் பட்டமேற்படிப்புப் பயிலக முதன்மையருமான முனைவர் டி.சுரேஷ் குமார் வாழ்த்துரை வழங்கினார். R ஐப் பயன்படுத்தி தரவு பகுப்பாய்வின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்தார்.

பயிற்சியில் R நிரலாக்க அடிப்படைகள், தரவு இடைமுகங்கள், R தொகுப்புகள், புள்ளியியல் கருத்துகளின் அடிப்படைகள், தொடர்பு, இணைவு, பின்னடைவு, chi-squared test, ANOVA போன்ற அடிப்படை புள்ளிவிவர பகுப்பாய்வு ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. உதவிப் பேராசிரியர்களான முனைவர் ந. சரண்யா (உயிர் தகவலியல்), முனைவர் சந்தோஷ் கணபதி பாட்டீல் (புள்ளியியல்) மற்றும் முனைவர் T.T. திவ்யப்பிரபா (திட்ட விஞ்ஞானி) ஆகியோர் R பயிற்சி அளித்தனர்.

தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பவியல் துறையின் பேராசிரியரும் தலைவருமான முனைவர் இ. கோகிலாதேவி நன்றியுரை வழங்கி நிகழ்வை நிறைவு செய்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...