உக்கடம் குடிசை மாற்று திட்டம்: 520 வீடுகள் கட்டித்தர கோரி இந்து மக்கள் கட்சி மனு

உக்கடம் சிஎம்சி காலனி பகுதியில் 520 வீடுகள் கட்டித்தர வாக்குறுதி அளித்த குடிசை மாற்று வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளது.


கோவை: உக்கடம் சிஎம்சி காலனி பகுதியில் 520க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டித் தருவதாக குடிசை மாற்று வாரியம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன், உக்கடம் குளக்கரை அருகிலும் காய்கறி சந்தைக்குப் பின்புறமும் உள்ள வீடுகளை காலி செய்யுமாறு குடிசை மாற்று வாரியம் அப்பகுதி பட்டியல் இன மக்களைக் கேட்டுக்கொண்டது. மேலும், காலி செய்யப்பட்ட இடங்களிலும், தற்போது மீன் சந்தை நடைபெறும் இடத்திலும் 520 பல்லடுக்கு குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்ற வாக்குறுதியின் பேரில் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

ஒன்றரை ஆண்டுகள் கழித்து, ஒரு பகுதியில் மட்டும் 222 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளன. ஆனால், இரண்டாம் கட்டமாக 298 குடியிருப்புகள் கட்டுவதற்கான எந்த வேலையும் தொடங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் சொந்தப் பகுதியிலேயே அகதிகளாக வாழ்கின்றனர்.

வாக்குறுதியின்படி மீன் சந்தை நடைபெறும் இடம் இன்னும் அப்புறப்படுத்தப்படவில்லை. 18 மாதங்கள் கடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. மாறாக, பத்திரப்பதிவு செய்யப்பட்ட அப்பகுதியின் பின்புறத்தில் உள்ள அதே பகுதி மக்களின் வீடுகளை மாற்று இடமாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தற்போது கோரியுள்ளனர்.

மீன் சந்தை உள்ள இடத்தில் குடிசை மாற்று குடியிருப்பு கட்ட தமிழக அரசு ஏற்கனவே நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால், மீன் சந்தையில் வியாபாரம் செய்யும் பிற வகுப்பினரின் கோரிக்கையால் இத்திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், உக்கடம் மீன் மார்க்கெட்டை அகற்றி, அப்பகுதி பட்டியலின மக்களுக்கு மீதமுள்ள வீடுகளைத் தர வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது. இக்கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், அப்பகுதி மக்களைக் கொண்டு பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...