உடுமலையில் மின் கட்டண உயர்வு மற்றும் மின்சார திருத்த சட்டத்திற்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் மின் கட்டண உயர்வு, மின்சார திருத்த சட்டம் மற்றும் உதய் மின் திட்டத்திற்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பேருந்து நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் மின் கட்டண உயர்வை கண்டித்தும், மின்வினியோகத்தை தனியாருக்கு தாரை வாக்கும் நோக்கில் உள்ள மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், மாநில உரிமைகளை பறிக்கும் உதய் மின் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தாலுகா செயலாளர் சௌந்தரராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் K.M. இசாக், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சுப்பிரமணியம், தாலுக்கா துணை செயலாளர் கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், மாவட்ட குழு உறுப்பினர்களான ரணதேவ், ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...