மனைவிக்கு உயர் சிகிச்சை கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன் கணவர் போராட்டம்

திருப்பூரில் விபத்தால் மூளை இரத்தக் கசிவு ஏற்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய தற்காலிக பணியாளருக்கு உயர் சிகிச்சை கோரி கணவர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன் போராட்டம் நடத்தினார். அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் விபத்தால் மூளை இரத்தக் கசிவு ஏற்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய தற்காலிக பணியாளருக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பாதிக்கப்பட்ட மனைவியை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு கிடத்தி போராட்டத்தில் ஈடுபட்ட கணவரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அடுத்த தேவம் பாளையம் பகுதியைச் சேர்ந்த சோழனின் மனைவி ஜோதிலட்சுமி, உடுமலை கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக பணியாளராகப் பணியாற்றி வருகிறார். மாற்றுத்திறனாளியான இவர், தனக்கு பணியிடமாறுதல் வேண்டும் என விண்ணப்பித்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக இவருக்கு பணியிடமாறுதல் வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் பணிக்குச் சென்ற ஜோதிலட்சுமிக்கு விபத்து ஏற்பட்டு மூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜோதிலட்சுமி கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், உடனடியாக அவருக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், பணி நிரந்தரம் செய்து பணியிடமாறுதல் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து, தீவிர சிகிச்சையில் இருந்த மனைவி ஜோதிலட்சுமியை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பு கிடத்தி கணவர் சோழன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து சோழன் தனது போராட்டத்தைக் கைவிட்டார். பின்னர், ஜோதிலட்சுமி உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...