ஒரே போனில் மோடியுடன் பேசி கோவைக்கு திட்டங்களை பெற முடியும் என்ற அண்ணாமலை எங்கே? - சிங்கை ராமச்சந்திரன் கேள்வி

அதிமுக ஐடி விங் தலைவர் சிங்கை ராமச்சந்திரன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து, மத்திய பட்ஜெட் கோவையின் வளர்ச்சிக்கு உதவவில்லை என்றும், அண்ணாமலையின் வாக்குறுதிகள் நிறைவேறவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.


கோவை: அதிமுக ஐடி விங் தலைவர் சிங்கை ராமச்சந்திரன் கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது:

"ஒரே ஒரு போனில் மோடியுடன் பேசி கோயம்புத்தூருக்கு தேவையான திட்டங்களை பெற்றுத்தர முடியும் என்று அண்ணாமலை கூறினார். ஆனால் மத்திய பட்ஜெட் எந்த விதத்திலும் கோவையின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இல்லை. 'என் கனவு நமது கோவை' என்ற பெயரில் அண்ணாமலை வெளியிட்ட திட்டங்கள் கனவாகவே போய்விட்டது. வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுக்கான வரி 40 சதவீதத்திலிருந்து 35 சதவீதத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் கோவையைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கு ஏதேனும் பயன் இருக்கிறதா? கோவை மெட்ரோ திட்டத்திற்காக அண்ணாமலை எந்த முயற்சியும் எடுக்கவில்லை."

"அண்ணாமலை அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது என்று பேசுகிறார். பாஜக கூட்டணி போட்டியிட்ட 39 தொகுதிகளில், 21 தொகுதிகளில் டெபாசிட் வாங்கவில்லை. சிபி ராதாகிருஷ்ணன் பெற்ற வாக்கு சதவீதத்தை விட அண்ணாமலை 1/2 சதவீதம் குறைவாகவே பெற்றுள்ளார். எனவே அதிமுகவை பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதியே கிடையாது."

அண்ணாமலைக்கு நிதி அளிக்கக் கோரி மிரட்டப்பட்டதாக தொழிலதிபர் ஒருவர் தன்னிடம் கூறியதாக சுட்டிக்காட்டிய ராமச்சந்திரன், இப்படிப்பட்ட நபரால் கோவை மக்களுக்கு நல்லது செய்ய முடியாது என்று குற்றம் சாட்டினார்.

சிறு குறு தொழில் நிறுவனங்கள் ஜிஎஸ்டியால் பெரும் பாதிப்படைந்துள்ளதாகவும், தமிழக அரசின் மின் கட்டண உயர்வால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறினார். இத்தகைய காரணங்களால் தமிழகத்தில் இயங்கி வந்த தொழில் நிறுவனங்கள் மூடப்படுவதால் வேலை வாய்ப்புகள் பறிபோவதாகவும் குறிப்பிட்டார்.

"பிரதமரை கோவைக்கு அழைத்து வந்த அண்ணாமலையால் ஒரு திட்டத்தை வாங்கித் தர முடியவில்லையா? பிரதமரிடம் பேசுவதற்கான ஹார்ட் லைன் என்னானது? ரீசார்ஜ் பண்ணவில்லையா?" என்று கேள்வி எழுப்பினார்.

வெள்ளலூர் குப்பை கிடங்கு தீயை அணைத்ததற்கான டீ செலவு குறித்து, "டீயை வைத்து தீயை அணைத்திருப்பார்கள் போலிருக்கிறது!" என்று கிண்டலாக கூறினார். வீடு கட்டுவதற்கான அப்ரூவல் கட்டணம் உயர்த்தப்பட்டதால் கடன் வாங்கி வீடு கட்டக்கூடிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

"2.47 கோடி மின் இணைப்பில் 1 கோடி பேர் 100 யூனிட்டுக்கும் குறைவான அளவிலேயே மின்சாரத்தை பயன்படுத்தும் ஏழ்மை நிலையில் இருக்கிறார்கள். பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, குடிநீர் வரி உயர்வு என அனைத்தும் உயர்த்தப்பட்டால் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாவார்கள்" என்று முடித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...